ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வர்த்தகப்போர் அச்சத்தால் இம்மாத தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், பங்குச்சந்தை ஏற்றம்பெற தொடங்கியது. அந்த வகையில் இந்திய பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 278 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 130 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 66 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 363 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 397 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 470 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

890 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 79 ஆயிரத்து 449 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 247 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 915 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 290 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 578 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com