சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (24.12.2025 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் உள்பட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 17 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 158 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 104 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 203 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

8 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 577 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 64 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 460 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

45 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 905 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 60 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 169 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com