தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (25.11.2025 - செவ்வாய்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 74 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 884 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 15புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 820 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 89 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 409 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 313 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 587 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

8 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 18 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 68 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 806 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com