சரிவுடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

நிப்டி 25 ஆயிரத்து 492 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
சரிவுடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் இறுதி நாளான இன்று (07.11.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 17 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 492 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 322 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 876 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

205 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின்நிப்டி 27 ஆயிரத்து 238 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 94 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 216 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

71 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 446 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 199 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 12 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com