

மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (30.01.2026 - வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 98 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 320 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 347 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 610 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 178 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 330 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 296 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 269 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
24 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 384 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 67 ஆயிரத்து 69 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்