சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.36-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.59-ம் அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை கடந்த 15-ந்தேதியில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அன்றைய தினம் ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 அதிகரித்தது. அதன் பின்னரும் விலை அதிகரித்தபடியே இருக்கிறது.

அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.108.20-க்கு விற்பனையானது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து, ரூ.99.98-க்கு விற்பனையானது. கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.36-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.59-ம் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரம்

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.98-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com