காற்றாலை இறக்கைகள் கையாளுவதில் தூத்துக்குடி துறைமுகம் 74.5% வளர்ச்சி

துறைமுகத்தில் கையாளப்பட்ட காற்றாலை இறக்கை கப்பல்களின் எண்ணிக்கையும் 3-ல் இருந்து 52 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி துறைமுகம்
Published on: 

தூத்துக்குடி

காற்றாலை இறக்கைகள் கையாளுவதில் தூத்துக்குடி துறைமுகம் 74.5% வளர்ச்சி அடைந்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், காற்றாலை இறக்கைகள் மற்றும் உதிரி பாகங்கள் கையாளுவதில் 74.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காற்றாலை இறக்கைகளை கையாள்வதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதுடன், பெரிய அளவிலான பசுமை எரிசக்தி சரக்குகளை கையாள்வதற்கான சிறப்பு உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது.

கப்பல்களின் எண்ணிக்கை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்கு போக்குவரத்துக்கான முக்கிய தளவாட மையமாகவும், முக்கிய துறைமுகமாகவும் விளங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை, துறைமுகத்தில் 2,188 காற்றாலை இறக்கைகள் கையாளப்பட்டுள்ளன. 2025-26 நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 1,254 காற்றாலை இறக்கைகள் கையாளப்பட்ட நிலையில், தற்போது 74.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில், துறைமுகத்தில் கையாளப்பட்ட காற்றாலை இறக்கை கப்பல்களின் எண்ணிக்கையும் 3-ல் இருந்து 52 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சி, துறைமுகத்தில் கையாளப்படும் காற்றாலை சார்ந்த சரக்குகளின் தொடர்ச்சியான அதிகரிப்பை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com