அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: வாகன உதிரிபாக ஏற்றுமதியாளர்கள் வருவாய் குறைகிறது

அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய வாகன உதிரிபாகங்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: வாகன உதிரிபாக ஏற்றுமதியாளர்கள் வருவாய் குறைகிறது
Published on

மும்பை,

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்க நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பேன் எனக்கூறி, பிற நாடுகள் மீது கடுமையாக வரி விதிப்பினை அமல்படுத்தினார். பல்வேறு நாடுகள் விதித்த கோரிக்கையை ஏற்று தற்போது பரஸ்பர வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனா மீது மட்டும் 245 சதவீதம் அளவுக்கு அமல் உள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு முன்பாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூடுதல் வரியை விதித்தார். இதன்படி, அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய வாகன உதிரிபாகங்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வரி விதிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில், இந்திய வாகன உதிரிபாக தொழிலின் வருவாய் வளர்ச்சி, 10 சதவீதத்துக்கு பதிலாக 8 சதவீதமாக குறையும் என்று தர மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது. இதன்விளைவாக, இந்திய வாகன உதிரிபொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடி முதல் ரூ.4 ஆயிரத்து 500 கோடிவரை வருவாய் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com