தங்கம் விலை மீண்டும் உயருமா? குறையுமா? டிசம்பரில் காத்திருக்கும் முக்கிய திருப்பம் - நிபுணர்கள் கணிப்பு

தங்கம் விலை இனி குறையுமா? மீண்டும் ஏறுமா? என சந்தை நிலவரத்தையே ஒரு குழப்பத்துக்கு தங்கம் விலை நிலவரம் தள்ளிவிட்டிருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

தங்கம் விலை சரிவையே சந்திக்கும். ஏற்கனவே சரிந்து வரும் சூழலில், மேலும் விலை குறையும் என்றே வல்லுனர்கள் கணிக்கின்றனர். இதுதவிர அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாக இருக்கும் வேலைவாய்ப்புத் தரவுகளை பொறுத்தே, தங்கம்விலையின் போக்கு அமையும்

தங்கம் விலை இனி குறையுமா? மீண்டும் ஏறுமா?

தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து சரிந்து கடந்த 21-ந்தேதி ரூ.92 ஆயிரத்துக்கு கீழும் சென்றது. இப்படியாக மேலும் விலை குறைந்து ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி நிலைமை அப்படியே மாறியது. என்ன வேகத்தில் இறங்கியதோ? அதே வேகத்தில் ஏற்றம் காணத் தொடங்கியது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.920 அதிகரித்தது. 23, 24-ந்தேதிகளில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்தது. நேற்று அதிரடியாக குறைந்தது. இதனால், தங்கம் விலை இனி குறையுமா? மீண்டும் ஏறுமா? என சந்தை நிலவரத்தையே ஒரு குழப்பத்துக்கு தங்கம் விலை நிலவரம் தள்ளிவிட்டிருக்கிறது.

பொருளாதார நிபுணர்கள்

அமெரிக்காவின் முக்கியப் பணவீக்கக் குறியீடான தனிநபர் நுகர்வு செலவுகள் (பி.சி.இ.), மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) தரவுகள் வெளியிடப்பட இருக்கின்றன. பணவீக்கக் குறியீடு கடந்த செப்டம்பர் மாதம் 3.6 சதவீதமாக இருந்த சூழலில், அது 3.8 சதவீதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தி 3-வது காலாண்டில் அதாவது ஜூலை-செப்டம்பரில் 3.4 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக மேல்நோக்கி திருத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை சரிவையே சந்திக்கும்

பணவீக்கம் உயர்ந்தால், மத்திய பெடரல் வங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியே தீரும். அவ்வாறு உயர்த்தினால் முதலீடு தராத தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் கவனத்தை செலுத்தமாட்டார்கள். இதனால் தங்கம் விலை சரிவையே சந்திக்கும். ஏற்கனவே சரிந்து வரும் சூழலில், மேலும் விலை குறையும் என்றே வல்லுனர்கள் கணிக்கின்றனர். இதுதவிர அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாக இருக்கும் வேலைவாய்ப்புத் தரவுகளை பொறுத்தே, தங்கம்விலையின் போக்கு அமையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

X