வங்கிக் கணக்கில் மறந்துபோன பணத்தை மீட்கலாம்: எப்படி தெரியுமா?

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் அல்லது மறந்துபோன வைப்புத்தொகைகள் ஏதேனும் இருந்தால் இந்த வசதியைப் பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Published on: 

வங்கிகளில் கணக்கு தொடங்கி நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வங்கிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளாகப் பரிவர்த்தனை இல்லாமல், உரிமை கோரப்படாமல் இருக்கும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் ரிசர்வ் வங்கியின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படுகின்றன. இத்தகைய கேட்பாரற்ற வைப்புத்தொகைகள் ஏதேனும் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை அறிய UDGAM என்ற இணையதள வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

எப்படி தேடுவது?

1. https://udgam.rbi.org.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.

3. கணக்குதாரரின் பெயர், வங்கியின் பெயர், PAN எண் உள்ளிட்ட விவரங்களைப் பயன்படுத்தித் தேடலாம்.

4. வைப்புத்தொகை இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட வங்கியை அணுக வேண்டும்.

பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

கேட்பாரற்ற வைப்புத்தொகை இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்குச் சென்று தேவையான ஆவணங்கள் மற்றும் கே ஒய்சி விவரங்களைச் சமர்ப்பித்து பணத்தைக் கோரலாம். தகுதியைப் பொறுத்து வட்டியுடன் பணத்தைப் பெறவும் வாய்ப்பு உள்ளது.

UDGAM இணையதளம் வைப்புத்தொகைகளைத் தேடுவதற்கான வசதி மட்டுமே. பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட வங்கியிடம்தான் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் அல்லது மறந்துபோன வைப்புத்தொகைகள் ஏதேனும் இருந்தால் இந்த வசதியைப் பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ளலாம்.

X