தொழிலாளியை சாதி பெயரை கூறி தாக்கி கொலை மிரட்டல்; 2 வாலிபர்கள் கைது

வல்லநாடு அருகே மோட்டார் சைக்கிளில் மோதியதை தட்டிக் கேட்ட தொழிலாளியை சாதி பெயரை கூறி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
தொழிலாளியை சாதி பெயரை கூறி தாக்கி கொலை மிரட்டல்; 2 வாலிபர்கள் கைது
Published on

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே மோட்டார் சைக்கிளில் மோதியதை தட்டிக் கேட்ட தொழிலாளியை சாதி பெயரை கூறி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளால் மோதல்

முறப்பநாடு அருகே உள்ள மணக்கரை அனந்தநம்பி குறிச்சியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் கருப்பசாமி (வயது28). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வல்லநாடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.வல்லநாடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும், அங்கு நின்று கொண்டிருந்த உடையார்குளம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான முருகன் மகன் சேகர் (45) என்பவர் மீதும், இவரது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

தாக்குதல்

இதில் ஆத்திரமடைந்த சேகர், மோட்டார் சைக்கிளால் மோதியது குறித்து கருப்பசாமியிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது கருப்பசாமியும், அங்கிருந்த அவரது நண்பரான அனந்தநம்பிகுறிச்சியைச் சேர்ந்த உலகு மகன் வேல்முருகன் (48) என்பவரும் சேர்ந்து சேகரிடம் தகராறு செய்துள்ளனர். அத்துடன் சாதிப் பெயரை கூறி அவதூறாகப் பேசி அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து உள்ளனர்.

2 பேர் கைது

இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் சேகர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com