ஜாமீனில் வெளியே வந்த நடிகை சஞ்சனாவுக்கு அறுவை சிகிச்சை

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி சில மாதங்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கில் கைதானது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜாமீனில் வெளியே வந்த நடிகை சஞ்சனாவுக்கு அறுவை சிகிச்சை
Published on

போதை பொருளை பயன்படுத்தியது மற்றும் போதை பொருளை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது போன்ற குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு உடல்நல பிரச்சினை இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் திடீரென்று அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை சஞ்சனா கல்ராணி வலைத்தளத்தில் வெளியிட்டு குணமடைந்து வருவதாக பதிவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com