கேமோன் 20 பிரீமியர்

கேமோன் 20 பிரீமியர்
Published on

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் டெக்னோ நிறுவனம் கேமோன் 20 பிரீமியம் என்ற பெயரிலான ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.7 அங்குல முழு அமோலெட் திரையைக் கொண்டது. 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்ட இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், இரண்டு சிம்கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும், திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சாரும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 45 வாட் சார்ஜருடன் வந்துள்ள இதன் விற்பனையக விலை சுமார் ரூ.29,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com