கேமோன் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம்

கேமோன் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் டெக்னோ நிறுவனம் கேமோன் 20 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரை உள்ளது.

பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் விலை சுமார் ரூ.15,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com