தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கீழுர் ரெயில் நிலையம் அருகே தாமுத்துநகர் பொன்சுப்பையா நகரை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்தசுப்பிரமணியன் (வயது 23) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். உடனடியாக போலீசார் கந்தசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com