புதுக்கோட்டையில் கஞ்சா விற்றவர் கைது

புதுக்கோட்டையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் கஞ்சா விற்றவர் கைது
Published on

தூத்துக்குடி:

புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கூட்டாம்புளி பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கூட்டாம்புளி சாமி கோவில் தெருவைச் சேர்ந்த மிளகுராஜா மகன் முத்துசாமி (வயது 38) என்பதும், அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துசாமி மீது கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com