26 வயது இளம் நடிகையை மணந்த கேப்டன் அமெரிக்கா நடிகர்

கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் இவான்ஸ், தனது காதலியை கரம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
26 வயது இளம் நடிகையை மணந்த கேப்டன் அமெரிக்கா நடிகர்
Published on

'மார்வெல்' படங்கள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற ஹாலிவுட் நடிகர் கிறிஸ் இவான்ஸ் 'கேப்டன் அமெரிக்கா' கதாபாத்திரம் மூலம் உலக அளவில் பிரபலமானார்.

42 வயதான கிறிஸ் இவான்ஸ், 26 வயதான போர்ச்சுகீசிய நடிகை ஆல்பா பாப்டிஸ்டாவை காதலித்து வந்தார். தற்போது இருவருக்கும் இங்கிலாந்து பாஸ்டன் நகரில் உள்ள கிறிஸ் இவான்ஸ் வீட்டில் ரகசிய திருமணம் நடந்துள்ளது. இதில் மார்வெல் நடிகர்கள் ராபர்ட் டவுனி, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் ஜான் ராசிங்க்சி, எமிலி பிளண்ட், ஜெர்மி ரன்னர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

திருமண விழாவில் கலந்துகொண்டவர்கள் திருமண தகவலை வெளியிட மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளனராம். அவர்களது செல்போன்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனாலும் திருமணத்துக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலமே இந்த ரகசிய திருமணம் தெரியவந்துள்ளது. கிறிஸ் இவான்ஸ் - ஆல்பா பாப்டிஸ்டா தம்பதியருக்கு உலகளவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கிறிஸ் இவான்ஸ், தன்னைவிட 16 வயது குறைவான ஆல்பா பாப்டிஸ்டாவை ரகசிய திருமணம் செய்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com