கார் மோதி மளிகைக்கடை உரிமையாளர் பலி

தியாகதுருகத்தில் கார் மோதி மளிகைக்கடை உரிமையாளர் பலி
கார் மோதி மளிகைக்கடை உரிமையாளர் பலி
Published on

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 45). தியாகதுருகத்தில் மளிகைக்கடை நடத்தி வந்த இவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தியாகதுருகம் புறவழிச் சாலையில் உள்ள உணவகத்துக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ராமகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com