நாக்பூரில் மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த கார் - 5 பேர் படுகாயம்

நாக்பூர் போர்கேடி மேம்பாலத்தில் இருந்து கார் ஒன்று தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
நாக்பூரில் மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த கார் - 5 பேர் படுகாயம்
Published on

நாக்பூர், 

நாக்பூர் போர்கேடி மேம்பாலத்தில் நேற்று காலை 7.30 மணி அளவில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கீழே தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த வழித்தடத்தில் ரெயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த புட்போரி போலீசார் விபத்தில் சிக்கிய காரில் படுகாயத்துடன் கிடந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com