கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்

கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்
கார் கவிழ்ந்து வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்
Published on

உசிலம்பட்டி

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியை சேர்ந்தவர் காசிமாயன். இவரது மகன் வசந்த்(வயது 23). இவரின் நண்பர்கள் பிரதீப்குமார், விஷால்பரத், அழகேசன். இவர்கள் 4 பேரும் விருவீட்டிலிருந்து ஒரு காரில் உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு வந்தனர். விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் அதே காரில் விருவீட்டை நோக்கி சென்றனர். இவர்கள் வத்தலக்குண்டு சாலையில் உள்ள வெள்ளைமலைப்பட்டி அருகே சென்ற போது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வசந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பிரதீப்குமார், விஷால்பரத், அழகேசன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com