வீடுகளில் பயன்படுத்த ஏற்ற ‘கார்ப்பெட்’ வகைகள்

அறைகளுக்கான தரை விரிப்புகள் இரண்டு வகைகளாக உள்ளன.
வீடுகளில் பயன்படுத்த ஏற்ற ‘கார்ப்பெட்’ வகைகள்
Published on

வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் புளோர் மேட் அல்லது கார்ப்பெட் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அறைகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப அவற்றை தேர்வு செய்து உபயோகப்படுத்தலாம்.

ஹாலுக்கு அழகு சேர்க்கும் டிசைனர் கார்ப்பெட், சமையலறைக்கு பொருத்தமான ஆன்டி-பேட்டிக் மேட், மாடிப்படி வழுக்காமல் இருக்க ஆன்டி-ஸ்லிப் மேட், உடற்பயிற்சி அறைக்கான மேட், ஸ்விட்ச் போர்டுக்கு அருகில் போடப்படும் ஷாக்-புரூப் மேட் போன்றவற்றை இடத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

அறைகளுக்கான தரை விரிப்புகள் இரண்டு வகைகளாக உள்ளன. தரை முழுவதும் மூடும் வகையில் உள்ளவை கார்பெட் எனப்படும். அறையின் கதவுக்கு அருகில் வெளிப்புறம் மற்றும் சோபா போன்ற இருக்கைகள் இல்லாத அறைகளில் அழகுக்காக விரிக்கப்படும் சிறிய அளவிலான விரிப்புகள் மேட் அல்லது ரக்ஸ் என்று சொல்லப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com