விதிகளை மீறி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு

விதிகளை மீறி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விதிகளை மீறி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு
Published on

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி சகாயராஜ் மற்றும் போலீசார் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த ஆலையில் அரசு விதிகளை மீறி அதிக ஆட்களை வைத்து பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி சகாயராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பட்டாசு ஆலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com