வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மீது வழக்கு

முதல் மனைவி பிரசவத்துக்கு சென்ற நிலையில் வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்த போலீஸ்காரர் மீது வழக்கு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருத்தராஜா (வயது 28). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதல் மனைவி பிரசவத்திற்கு சென்றிருந்த போது வேறொரு பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து 2-வது திருமணம் செய்த பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருத்தராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மேல்விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரியலூர் போலீசாருக்கு, இந்த வழக்கு மாற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com