முன்னாள் கவுன்சிலரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் கவுன்சிலரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கரூர்
Published on

தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள தொண்டமான்கிணம் ஊராட்சி பெருமாள்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). முன்னாள் கவுன்சிலரான இவர், கொசூர் ஊராட்சி உப்புளியப்பட்டியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கவுண்டம்பட்டியைச் சேர்ந்த மகேஷ், உப்பிலியப்பட்டியை சேர்ந்த தனபால், நங்கவரம் மாடு விழுந்தான்பாறை பகுதியை சேர்ந்த ரூபதி ஆகிய 3 பேரும் சேர்ந்து சுப்பிரமணியனை சுற்றி வளைத்து கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களால் தாக்கினர். இதில் கீழே விழுந்து காயம் அடைந்த சுப்பிரமணியன் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் மகேஷ், தனபால், ரூபதி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com