

ராஜபாளையம்,
ராஜபாளையம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் வனராஜ். இவருடைய மகன் பாரதி (வயது 25).. சித்திரை திருவிழாவின் போது இளைஞர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் பாரதியைச் சூழ்ந்து கல்லால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாரதி புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த செல்வக்குமார், அமீர், பிரவீன், ஈஸ்வரன் ஆகிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போல் புல்லுக்கடை தெருவில் தங்கச்சாமி (45) என்பவரை கீழே தள்ளியதில் முகத்தில் காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தங்கச்சாமி அளித்த புகாரின் பேரில் புல்லுக்கடை தெருவைச் சேர்ந்த நீராத்துலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.