

நொய்யல்,
அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் மது பாட்டிலை வைத்துமது அருந்துவதற்கு மது பிரியர்களுக்கு அனுமதி அளித்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 35), கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் (65), மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (51) ஆகிய 3 பேரும் அவர்களது கடைகளில் சிலரை மது அருந்த அனுமதித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.