

பரமக்குடி,
பரமக்குடி பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பரத் குமார். இவர் காட்டு பரமக்குடி முத்தையா கோவில் அருகே வைகை ஆற்றில் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூடைகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த எமனேசுவரம் போலீசார் அவரை பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.