போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலையில் திரிய விட்ட 2 பேர் மீது வழக்கு

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலையில் திரிய விட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை சாலையில் திரிய விட்ட 2 பேர் மீது வழக்கு
Published on

திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த திருத்தணி-திருப்பதி நெடுஞ்சாலையான பாண்டூர் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் திரிந்த 5 பசுமாடு 2 கன்று குட்டிகள் என 7 கால்நடைகளை அப்புறப்படுத்தினார்கள். மேலும் கால்நடைகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் விட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையான திருமழிசை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருமழிசை பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 53) என்பவரது 4 கால் நடைகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் இடையூறு ஏற்படும் விதமாக சாலையோரம் படுத்து கிடந்தது. இதை தொடர்ந்து போலீசார் லோகநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com