

புதுச்சேரி
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று புதுவையில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அண்ணா சாலையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ மற்றும் காளிதாஸ், பாஸ்கரன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.