மனைவியை தாக்கிய லாரி டிரைவர் மீது வழக்கு

பாகூர் அருகே மது குடித்ததை கண்டித்த மனைவியை தாக்கிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனைவியை தாக்கிய லாரி டிரைவர் மீது வழக்கு
Published on

பாகூர்

பாகூர் அடுத்த அரங்கனூர் மெயின் ரோடு ராஜா நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 55). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு வசந்தி என்கிற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். வசந்தி வீடு பராமரிப்புக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து ராஜசேகரன் மது குடித்ததாக கூறுப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், வசந்தியை கையாலும், காலாலும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் கரிக்கலாம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக ராஜசேகர் மீது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com