பெண்ணை தாக்கியதாக கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியதாக கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கரூர்
Published on

குளித்தலை

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள நல்லமுத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி சண்முகசுந்தரி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கூட்டுக் குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். செல்வமணி, சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் தம்பதியினருக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. மேலும், தனியாக வாழலாம் என சண்முகசுந்தரி கணவரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு செல்வமணி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வமணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து சண்முகசுந்தரியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சண்முக சுந்தரி புகார் அளித்தார். அதன்பேரில், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வமணி அவரது தந்தை சுப்பன், தாய் மல்லிகா, சகோதரி நந்தினி, அவரது கணவர் ரமேஷ், உறவினர்கள் காளிமுத்து, வீரம்மாள், அண்ணன் சரவணன் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com