ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 700 மாடுகள் விற்பனைக்கு வந்தன

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 700 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 700 மாடுகள் விற்பனைக்கு வந்தன
Published on

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 50 கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கன்றுகுட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

450 பசு மாடுகள், 250 எருமை மாடுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.44 ஆயிரம் வரையும், பசுமாடு ஒன்று ரூ.31 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையும் விற்பனையானது.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மராட்டியம், கோவா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். நேற்று கூடிய சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com