ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு கொண்டாட்டப்பட்டது.
ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுட்டு கொண்டாட்டம்
Published on

கரூர்

ஆடி மாத பிறப்பையொட்டி கரூர் அமராவதி ஆற்று படிக்கட்டுதுறை பகுதியில் பொதுமக்கள் தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதற்காக அருகிலுள்ள கடைகளுக்கு சென்று தேங்காய்களை சுடும் அழிஞ்சி குச்சி மற்றும் தேங்காய்களை வாங்கினர். அவ்வாறு வாங்கி வந்த தேங்காயை தரையில் நன்றாக உருட்டி சுத்தப்படுத்தினர். பின்னர் தேங்காயில் உள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை, எள், அவல் உள்ளிட்ட பொருட் களை உள்ளே போட்டு மூடினர். பின்னர் நெருப்பு மூட்டி அரை மணி நேரத்திற்கு மேலாக சுட்டனர். நன்றாக சுடப்பட்ட தேங்காயை உடைத்து, அமராவதி ஆற்று கரையோரத்தில் உள்ள விநாயகருக்கு படையலிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். சிலர் கொரோனா காரணமாக ஆடிப்பண்டிகையை தங்களது வீடுகளிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேபோல் நொய்யல் பகுதிகளிலும் பொதுமக்கள் தேங்காய் சுடும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com