உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் படத்தில் பெரும் நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளனர்.
உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்
Published on

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று மாரி செல்வராஜ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது அப்படத்தின் டைட்டில் போஸ்டரையும் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பெயர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு 'மாமன்னன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெரும் நடிகர்கள் பட்டாளம் இணைந்திருக்கும் மாமன்னன் படத்திற்கு அறிவிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com