குதிரைவால் திரைப்படத்தை பாராட்டிய திரைப்பிரபலங்கள்

மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக உருவாகியிருக்கும் குதிரைவால் திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
குதிரைவால் திரைப்படத்தை பாராட்டிய திரைப்பிரபலங்கள்
Published on

நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் அமைத்திருக்கிறார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.

உளவியல், ஆள்மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு, மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கி உள்ளனர்.

இப்படம் இன்று(18.03.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குதிரைவால் திரைப்படத்தை பிரத்யேகமாக திரைப்பிரபலங்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில், இயக்குனர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் மணிகண்டன், ஜி.எம்.சுந்தர், மைம் கோபி, ரமேஷ் திலக், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தை பாராட்டி அவர்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com