ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரம்-மின்சாதனங்கள் திருட்டு

ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரம்-மின்சாதனங்கள் திருட்டுபோனது.
ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரம்-மின்சாதனங்கள் திருட்டு
Published on

திருச்சி:

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார் (வயது 44). இந்த நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு திருச்சி கலெக்டர் அலுவலக சாலை பெரியமிளகுபாறையில் ஒரு வீட்டின் மேல்மாடியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த செல்போன் கோபுரத்தை சுரேஷ்குமார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு செய்தார். அப்போது அங்கு ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் கோபுரம் மற்றும் மின் சாதனங்கள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சுரேஷ்குமார் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com