தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிப்பு

தொழிலாளர்களிடம் பணம், செல்போனை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிப்பு
Published on

திண்டிவனம்,

மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டை அருகே கொரட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 22), தாயனூர் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (21), ஞானசேகர் (25), சிவா (23). இவர்கள் 4 பேரும் சென்னையில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வேலைக்காக 2 மோட்டார் சைக்கிள்களில் சென்னைக்கு புறப்பட்டனர். திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி எதிரே சென்ற போது இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர்கள் அங்கு நின்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கத்தி, அரிவாளை காட்டி அந்த 4 பேரையும் மிரட்டினர். மேலும் சம்பத்தின் மோட்டார் சைக்கிள், செல்போன், சிவாவின் செல்போன் மற்றும் இவர்கள் 2 பேரிடம் இருந்தும் ரூ.600 ஆகியவற்றை பறித்து கொண்டு மர்மநபர்கள் 2 பேரும் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com