

குன்னம்,
பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்மா (வயது 65). இவரது கணவர் ராமலிங்கம் இறந்துவிட்டதால் அவர் தனியாக வசித்து வந்தார். நேற்று நெடுவாசல் சாலையிலுள்ள கலாம் நகரில் மூதாட்டி செல்லம்மா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி முகவரி கேட்பதைப்போல, மூதாட்டி அருகே சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து செல்லம்மா அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.