நடிகர் தர்ஷன் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் தர்ஷன் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

பெங்களூரு,

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தர்ஷன், நடிகர் சுதீப் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது தர்ஷனின் மனைவி விஜயலட்சுமிக்கு எதிராக இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதள பக்கங்களில் சிலர் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளையும் பதிவிட்டனர். இதுதொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 6 பேரும் ஜாமீன் பெற முயன்று வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com