இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்தார்.
இரவு நேரத்தில் சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி
Published on

புதுச்சேரி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார். எனவே அவர் இன்று முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை. அவரது அலுவலக ஊழியர்கள் இன்று மாலை வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இரவு 10 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருவதாக சட்ட சபை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று முதல்-அமைச்சரின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணியளவில் அங்கு வந்தார். சுமார் 20 நிமிடம் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட அவர் 10.20 மணியளவில் அங்கிருந்து புறபட்டு சென்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி இரவில் சட்டசபைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com