சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிகளில், முதன்மை செயல் அதிகாரி திடீர் ஆய்வு

சிக்கமகளூருவில் அரசு ஆஸ்பத்திரிகளில், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிகளில், முதன்மை செயல் அதிகாரி திடீர் ஆய்வு
Published on

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் அரசு ஆஸ்பத்திரிகளில், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முதன்மை செயல் அதிகாரி

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து-மாத்திரைகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நோயாளிகள் மனவேதனைப்படும் நோக்கில் பேசக்கூடாது, அவர்களிடம் கணிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நோயை குணப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குறைகளை கேட்டறிந்தார்

அதன்பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து-மாத்திரைகள் உள்ளிட்டவை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். அதையடுத்து அவர் கடூர் தாலுகா பஞ்சேனஹள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.

அங்கும் ஆய்வு நடத்தினார். பின்னர் சிக்கமகளூரு அருகே கைமரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த டாக்டர்கள், செவிலியர்களிடமும் குறைகளை கேட்டறிந்து, மருந்து-மாத்திரை இருப்பு குறித்து கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார். இந்த சந்தர்ப்பத்தின்போது அவர் ஆஸ்பத்திரி கட்டிடங்களையும், அங்குள்ள வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com