புதைக்கப்பட்ட பெண்குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு

புதைக்கப்பட்ட பெண்குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு

சோழவந்தான் அருகே சக்கரப்ப நாயக்கனூரில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
Published on

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே சக்கரப்ப நாயக்கனூரில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பெண் குழந்தை

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத் துக்கு உட்பட்ட சக்கரப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி பாண்டிலட்சுமி. இவர் களுக்கு 29.8.21 அன்று பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை 7.3.22 முதல் காணவில்லை என்று பாண்டி லட்சுமி அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார்.

பின்னர் இவர்களது வீட்டின் முன்பு உள்ள தொட்டியில் குழந்தை தவறி விழுந்து இறந்ததாகவும் இறந்த குழந்தையை இவரது வீட்டருகே புதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்ததன்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் கடந்த 19-ந் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

பரிசோதனை

குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் நேற்று காலை உசிலம் பட்டி தாசில்தார் விஜயலட்சுமி, செக்கானூரணி இன்ஸ் பெக்டர் சிவசக்தி ஆகியோர் முன்னிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவர்கள் சிவக்குமார், ராதாமணி ஆகியோர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் அதே இடத்தில் குழந்தையின் உடல் புதைக்கப் பட்டது.

இந்த பணியில் மண்டல துணை தாசில்தார் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், வருவாய்ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராமநிர்வாக அலுவலர் முத்துமணி மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com