கரூர் அருகே தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி சாவு

கரூர் அருகே தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.
கரூர் அருகே தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி சாவு
Published on

கரூர்

கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மோனிஷா. இந்த தம்பதிக்கு பிறந்து ஒரு மாதமே ஆன தரணிபால் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் மோனிஷா காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள தாய் வீட்டில் வைத்து தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com