பாதிரியாராக சின்னி ஜெயந்த்

பாதிரியாராக சின்னி ஜெயந்த்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த் தற்போது நந்தா பெரியசாமி இயக்கும் 'திரு மாணிக்கம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சின்னி ஜெயந்த் கிறிஸ்தவ பாதிரியார் கதாபாத்திரத்தில் வருகிறார். தேவாலயத்தில் பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்த அவரது யதார்த்தமான நடிப்பை பார்த்து நந்தாபெரியசாமி கட்டிப்பிடித்து பாராட்டி உள்ளார். சின்னி ஜெயந்த் கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர். அந்த அனுபவமே பாதிரியார் வேடத்தில் சிறப்பாக நடிக்க காரணமாம். இது போல் சிறுவயதில் இந்து, இஸ்லாமிய பள்ளிகளிலும் படித்து இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com