தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
Published on

கார்த்திகை திருநாளையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நேற்று மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அதில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னியை லிங்கமாக பக்தர்கள் வணங்கினர். மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன. சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com