தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
Published on

காரைக்கால்

காரைக்கால் மாதா கோவில் வீதியில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நள்ளிரவு சிறப்பாக நடைபெற்றது. ஆலய பங்கு குரு அந்தோணி லூர்து அடிகளார், உதவி பங்கு தந்தை சிரில் மற்றும் தூய மரியன்னை பள்ளி முதல்வர் அருட்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குழந்தை ஏசு சொரூபத்தை பங்குத்தந்தை மந்திரித்து எடுத்துசென்று குடிலில் வைத்தார். விழாவில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் நேருநகர் அந்தோணியார் ஆலயம், கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயம் மற்றும் நெடுங்காடு, திரு-பட்டினம், அம்பகரத்தூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com