

புதுடெல்லி,
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் நெஞ்சுவலி காரணமாக கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (வியாழன்) உயிரிழந்தார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் சுயநினைவின்றி இருந்த நடிகர் நானா படேகரை உடனடியாக மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனை கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்படி, அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மறைந்த நடிகர் நானா படேகர் தமிழில் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் நானா படேகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூரியிருப்பதாவது:-
என் அன்பு நண்பர் நானாஜி இனி நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.