பாஸ்கர் ஒரு ராஸ்கல்

அரவிந்தசாமி-அமலாபால் ஜோடியுடன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ 2015-ம் ஆண்டில் வெளியாகி, கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘பாஸ்கர் தி ராஸ்கல்.’
Published on

அதில் மம்முட்டி, நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள். சித்திக் டைரக்டு செய்திருந்தார். இந்த படம், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.

இதில், கதாநாயகனாக அரவிந்தசாமி நடிக்க, கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ்கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன், தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ஆப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார்.

ரமேஷ்கண்ணா வசனம் எழுதுகிறார். பா.விஜய், விவேகா ஆகிய இருவரும் பாடல்களை எழுத, அம்ரேஷ் இசையமைக்கிறார். சித்திக் டைரக்டு செய்கிறார். இவர், விஜய்-சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ், விஜயகாந்த்-பிரபுதேவா நடித்த எங்கள் அண்ணா, விஜய்-அசின் நடித்த காவலன் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். சித்திக் இயக்கும் 4-வது தமிழ் படம், இது. எம்.ஹர்சினி தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி, சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. படத்தை செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில், சில மாற்றங்கள்


மம்முட்டி-நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற மலையாள படம், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் படமாகி வருகிறது. மலையாள படத்தை இயக்கிய சித்திக், தமிழ் படத்தையும் டைரக்டு செய்கிறார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கதாநாயகன் அரவிந்தசாமியின் கதாபாத்திரத்திலும், நாயகி அமலாபால் கதாபாத்திரத்திலும், டைரக்டர் சில மாற்றங்களை செய்து இருக்கிறார். ரமேஷ்கண்ணா வசனம் எழுதியிருக்கிறார்.

அதிரடி சண்டை காட்சிகளுடன் காதலை மையமாக கொண்ட படம், இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி ஜனரஞ்சகமாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அம்ரிஷ் இசையமைக்கிறார். விஜய் உலக நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம், அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com