''மதுவால் வாழ்க்கையை இழந்தேன்" - மனிஷா கொய்ராலா

''மதுவால் வாழ்க்கையை இழந்தேன்" - மனிஷா கொய்ராலா
Published on

தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், ஆளவந்தான், அர்ஜுனுடன் முதல்வன், ரஜினிகாந்துடன் பாபா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமாக இருந்த மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

அதன்பிறகு நேபாள தொழில் அதிபர் சாம்ராட் ஹெகலை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். புற்றுநோய் பாதிப்பிலும் சிக்கி சிகிச்சைக்கு பின் மீண்டார்.

இந்த நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அவர் கூறும்போது, "நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்.

மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது, அது நமது உறவுகள் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். எனது உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் மது அருந்துகிறார்கள். மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com