திருமணம் எப்போது? நடிகர் விஷால் பேட்டி

விஷால் நடிகர் சங்கத்துக்கு கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன் என நடிகர் விஷால் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருமணம் எப்போது? நடிகர் விஷால் பேட்டி
Published on

விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த லத்தி பட விழா நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரத்து 500 நடிகர்கள் நாடக நடிகர்களுக்கு நல உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்த நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் முயன்று வருகிறோம். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்து வசதிகள், இன்சூரன்ஸ் வசதிகள் கிடைக்க வேண்டும். எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு எல்லோரையும் அழைப்பேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com